| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

எச்சரிக்கை...! அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...!

by Vignesh Perumal on | 2025-05-26 10:42 AM

Share:


எச்சரிக்கை...! அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை கூறப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களை கூறப்படுகிறது. இந்த மாவட்டங்களில் காலை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், இந்த மழை பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அதன் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்காலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment