| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

மாணவர் மரணம்...! திருட்டு கும்பல் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.எம்.எல். எச்சரிக்கை..!

by Vignesh Perumal on | 2025-05-25 10:16 AM

Share:


மாணவர் மரணம்...! திருட்டு கும்பல் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.எம்.எல். எச்சரிக்கை..!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், தென்னம்பட்டி பொதுப்பணித்துறை குளத்தில் நடைபெற்ற மண் திருட்டு மற்றும் அதன் காரணமாக மாணவன் நிஷாந்த் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சி.பி.ஐ.எம்.எல். (CPIML) கட்சி வலியுறுத்தியுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அந்தக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சி.பி.ஐ.எம்.எல். வடமதுரை ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தென்னம்பட்டி பொதுப்பணித்துறை குளத்தில் நடைபெற்ற சட்டவிரோத மண் திருட்டு காரணமாக, மாணவன் நிஷாந்த் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த மரணத்திற்கு காரணமான, மண் மாஃபியா கும்பலின் தலைவனான சர்வேயர் ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை கோவிந்தன் ஆகியோர் மீது தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மேலும், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களின் குடும்பங்களுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

நீதிமன்றத் தடையை மீறி மண் அள்ள அனுமதி அளித்த கனிம வளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண் திருட்டை தடுக்க முயலும் நபர்களை வாகனம் ஏற்றி கொன்று விடுவதாக அச்சுறுத்தும் மண் திருட்டுக் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்.


இந்த கோரிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் நிறைவேற்றத் தவறினால், சி.பி.ஐ.எம்.எல். கட்சி சார்பில் வடமதுரை ஒன்றியத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment