by Vignesh Perumal on | 2025-05-25 10:00 AM
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்தவ வன்னியர்களுக்கான எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) இட ஒதுக்கீடு கோரும் மாநில மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி மற்றும் அகில இந்திய இந்து மகா சபா அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பட்டியில் இன்று (மே 24, 2025) நடைபெற்ற கிறிஸ்தவ வன்னியர் மாநாடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது என்றும், இது மதமாற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு முயற்சி என்றும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். எனவே, இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
மாநாடு தொடங்குவதற்கு முன்னதாகவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து மக்கள் கட்சி மாநில தொண்டரணி தலைவர் மோகன்-ஐ திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
தங்கள் தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் - பழனி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாகச் செயல்பட்ட போலீசார், மறியலில் ஈடுபட முயன்றவர்களையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளில் பதற்றம் ஏற்படாமல் தடுப்பதற்கான காவல்துறையின் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!