by Vignesh Perumal on | 2025-05-24 03:59 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 7 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு, பழனி நகரில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பழனி டிஎஸ்பி. தனஞ்செயன் மேற்பார்வையில், பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் பழனி நகர் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை வைத்திருந்த கீழ்க்கண்ட நபர்களைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதாவது, பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கோகுல்கண்ணன், குபேரபட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம், குபேரபட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக், குபேரபட்டினத்தைச் சேர்ந்த முகமதுஷேக், குபேரபட்டினத்தைச் சேர்ந்த தண்டபாணி, தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்த நாகேந்திரபிரசாத் ஜவகர்நகரைச் சேர்ந்த சரவணகுமார், சத்யா நகரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனி நகர் போலீசார், கஞ்சா விற்பனையின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும், இதன் சங்கிலித் தொடர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறும், சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!