by Vignesh Perumal on | 2025-05-24 12:04 PM
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள வீரககல் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெள்ளைமாலை வீரம்மன் கோயில் திருவிழாவில், பெண் பக்தர்கள் குளிக்கும்போது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களை பக்தர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் வெள்ளைமாலை வீரம்மன் கோயில் திருவிழாவில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். திருவிழாவின் ஒரு நாள் முழுவதும் பக்தர்கள் கோயிலிலேயே தங்கி வழிபடுவார்கள். வழக்கம் போல இந்த ஆண்டும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது.
நேற்று (மே 23, 2025) இரவு, திருவிழாவிற்கு வந்திருந்த பெண்கள் சிலர் குளிப்பதற்காக கோயிலின் கழிவறைக்குச் சென்றுள்ளனர். அப்போது, வண்ணம்பட்டியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், கழிவறையின் ஜன்னல் வழியாக தங்கள் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பெண்கள் சத்தம் போட்டதைக் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், அந்த நான்கு இளைஞர்களையும் விரட்டிச் சென்று சுற்றிவளைத்துப் பிடித்தனர். ஆத்திரமடைந்த உறவினர்கள், பிடிபட்ட இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்து, பின்னர் அங்கிருந்த கோயில் பாதுகாப்பு ஊழியர்களிடம் (செக்யூரிட்டி) அவர்களை ஒப்படைத்தனர்.
ஆனால், பாதுகாப்பு ஊழியர்கள் அந்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை தப்பிக்கவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கொதித்தெழுந்த பக்தர்கள், உடனடியாக செம்பட்டி நான்கு ரோடு பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வீடியோ எடுத்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களைத் தப்பிக்கவிட்ட பாதுகாப்பு ஊழியர்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னரே பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வீடியோ எடுத்த இளைஞர்களைத் தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!