by Vignesh Perumal on | 2025-05-23 12:19 PM
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை (மே 24, 2025) மாலையுடன் முடிவடைகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள தேர்வர்கள், இறுதி நேர அவசரம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கிரா கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கு இந்தத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 6,244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 24, 2025
விண்ணப்பப் பதிவுத் திருத்த காலக்கெடு: மே 29, 2025 முதல் மே 31, 2025 வரை
தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 17, 2025 (காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை)
தேர்வர்கள் TNPSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கும் நாளைதான் கடைசி நாள் என்பதால், கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் பதிவை முழுமையாக நிறைவு செய்யுமாறு TNPSC வலியுறுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!