by Vignesh Perumal on | 2025-05-23 11:47 AM
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த கடைகளில் பூட்டை உடைத்து நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும், கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயபிரதாப் என்ற இளைஞர் இந்த கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஜெயபிரதாப் மீது கொள்ளை, திருட்டு, பூட்டை உடைத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்ளை கும்பலில் மேலும் பலர் தொடர்புடையவர்கள் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த சுள்ளான் அகிலன், நித்தீஸ், கேடி கண்ணன், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த அராத் என்ற பாசில் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல், பூட்டியிருக்கும் கடைகளை நோட்டமிட்டு, கடப்பாறை போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் செல்வது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஜெயபிரதாப்பை பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்த முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தப்பியோடிய மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூடுவாஞ்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்கள் கடைகளிலும், வீடுகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!