by Vignesh Perumal on | 2025-05-23 11:20 AM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் இன்று விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் முக கவசம் அணிவது அவசியம் என்று தகவல் பரவி வந்த நிலையில், இந்த விளக்கம் பொதுமக்களிடையே நிலவிய குழப்பத்தை நீக்கியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை, தற்போதைய சூழலில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பெரிய அளவிலான அச்சம் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மேலும் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது மத்திய அரசு கோவிட்-19 பரவல் குறித்து எந்தவொரு புதிய ஆலோசனையையும் வெளியிடவில்லை. தமிழக சுகாதாரத்துறை ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP) மூலம் கோவிட் உட்பட அனைத்து வைரஸ்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதன் மூலம் நிகழ்நேர தரவு அறிக்கை, மாடலிங் மற்றும் பகுப்பாய்வு சாத்தியமாகிறது.
தமிழகத்தின் சுகாதார உள்கட்டமைப்பு வலிமையானது என்றும், எந்த நேரத்திலும் விரிவாக்கம் செய்யக்கூடிய திறன் கொண்டது என்றும் செல்வவிநாயகம் கூறினார். தேவைப்பட்டால், பொதுமக்களுக்கு தொற்று பரவல் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தற்போதைய சூழ்நிலையில், கோவிட் குறித்து பீதியடையத் தேவையில்லை. தமிழக அரசு வலுவான கண்காணிப்பு வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது.
அதே சமயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற அடிப்படை சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நல்லது என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!