| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

குறுகிய பாலங்கள் - தொடரும் விபத்துக்கள், தேசிய நெடுஞ்சாலை துறை அலட்சியம் ;

by Satheesh on | 2025-05-23 07:28 AM

Share:


குறுகிய பாலங்கள் - தொடரும் விபத்துக்கள், தேசிய நெடுஞ்சாலை துறை அலட்சியம் ;

தேனி: திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் அருகில் உள்ள குறுகிய பாலத்தில் பெரியகுளத்தில் இருந்து மதுரைக்குச்   சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு ஒரு மணி அளவில்சரக்கு லாரி எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது குறுகிய பாலம் என்பதால் நிலை தடுமாறி பாலத்தின் மீது மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த, சப் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான  நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  நெடுஞ்சாலை துறை மீட்பு வாகனம் NH NAGAI தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாகியும் வராததால், தனியார் மீட்பு வாகனம் மூலம் லாரி மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். வறட்டாரிலிருந்து தேவதானப்பட்டி வரை பல இடங்களிலும்  குறுகிய பாலங்கள் இருப்பதால் தொடர்ந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.சமீபகாலமாக விபத்து ஏற்படும் இடங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையை பராமரிக்கும் கம்பெனியின் மீட்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை சரிவர செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபகாலமாக  தொடர்ந்து ஏற்படும் விபத்துகளையும் உயிர் இழப்புகளையும் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றிய செய்தி பலமுறை எவிடென்ஸில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment