by Vignesh Perumal on | 2025-05-22 04:46 PM
திண்டுக்கல், YMR-பட்டியைச் சேர்ந்த 35 வயதான வினோத்குமார் என்பவர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூக்கடை நடத்தி வந்த வினோத்குமார், கடந்த மே 16-ம் தேதி கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் சுமையால் ஒரு இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!
பழனியில் பயங்கரம்....! வீட்டில் புகுந்து பெண்களை மிரட்டிய...! 2 பெண்கள் உட்பட 7 பேர் அதிரடி கைது...!