| | | | | | | | | | | | | | | | | | |
விளையாட்டு Sports

பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் - அமைச்சர் பங்கேற்பு :

by Satheesh on | 2025-05-22 03:38 PM

Share:


பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் - அமைச்சர் பங்கேற்பு :

தேனி : பெரியகுளம் சில்வர் ஜுப்ளி  ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 64 வது P D சிதம்பர சூரிய நாராயணன் சுழற்கோப்பைகாண  அகில இந்திய கூடைப் பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வந்தது. நேற்று, முதலில் நடைபெற்ற  3ம், 4ம் இடங்களுக்கான போட்டி  மற்றும் இறுதிப் போட்டி இரவு மின்னொளியில் நடைபெற்றது.


இப் போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக ஊரக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் I பெரியசாமி  BA, BGL,  தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற  இறுதிப்போட்டியில்  இந்தியன் வங்கி, சென்னை அணி 90 - 80 என்ற புள்ளிகள் கணக்கில் வருமான வரித்துறை, சென்னை  அணியினை வென்று கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணியினருக்கு சுழற்க் கோப்பை வழங்கப்பட்டது. 2ம் இடத்தினை  வருமான வரித்துறை, சென்னை அணியினரும்,முன்னதாக நடைபெற்ற போட்டியில் 80 - 78 என்ற புள்ளிகள் கணக்கில், 3ம் இடத்தினை இந்திய கப்பற்படை லெனோவா அணியினரும், 4ம் இடத்தினை விமானப்படை, புது டெல்லி அணியினரும்  கைப்பற்றினார். தொடர் நாயகனாக சிறப்பாக விளையாடிய இந்தியன் வங்கி, அணியின் முனி பிக் மியூன்பேக் (7) தேனி ஹீரோ மோட்டார்ஸ் டீலர் சார்பாக பிளசர் பிளஸ் டூவீலர் வழங்கி கௌரவிக்கப்பட்டது.   திரளான ரசிகர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் எழுப்பி  போட்டியினை கண்டுகளித்தனர். நிகழ்விற்கான ஏற்பாட்டினை சில்வர் ஜூப்ளி விளையாட்டு கழக செயலாளர் P C  சிலம்பர சூரிய வேலு மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment