by Vignesh Perumal on | 2025-05-22 12:34 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) பல்வேறு கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ், சுயவேலைவாய்ப்பு, வருமானம் ஈட்டும் செயல்பாடுகள், சிறுதொழில் மேம்பாடு மற்றும் கல்விக்காக குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.
TAMCO மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய கடன் திட்டங்கள் பின்வருமாறு:
தனிநபர் கடன்: சுயவேலைவாய்ப்பை உருவாக்க அல்லது வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு.
சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன்: குழுவாகச் சிறுதொழில் தொடங்க அல்லது மேம்படுத்த.
விராசாத் (கைவினைக் கலைஞர்களுக்கான கடன் திட்டம்): கைவினைக் கலைஞர்கள் தங்களின் தொழிலை மேம்படுத்த மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்க.
கல்விக் கடன்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுநிலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு.
இந்தக் கடன் திட்டங்கள், பயனாளிகளின் வருமானத்தின் அடிப்படையில் திட்டம் 1 மற்றும் திட்டம் 2 எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
திட்டம் 1: குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தனிநபர் கடன்: ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை.
கல்விக் கடன்: ஆண்டுக்கு 3% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை.
திட்டம் 2: குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.8,00,000/- வரை இருக்க வேண்டும்.
தனிநபர் கடன்: ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரை.
கல்விக் கடன்: மாணவர்களுக்கு 8%, மாணவிகளுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரை.
கைவினைக் கலைஞர்களுக்கான விராசாத் கடன்: ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது.
சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்: நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- வீதம், ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. (திட்டம் 2-ன் கீழ், நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வீதம், ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்).
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் இந்தக் கடன் திட்டங்களில் பயன்பெற, விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
சிறுபான்மையினர் மதச் சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
உணவு பங்கீடு அட்டை (ரேஷன் கார்டு) அல்லது இருப்பிடச் சான்றிதழ்
ஆதார் அட்டை
திட்ட அறிக்கை (சுயதொழில் கடன்களுக்கு)
வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள்
கல்விக் கடனுக்கு கூடுதலாகத் தேவைப்படும் ஆவணங்கள்:
பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்
உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல்
கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீதுகள்
குடும்ப அட்டை / வாழ்விடச் சான்று (ஸ்மார்ட் கார்டு) நகல்
சிறுபான்மையின மக்கள் இந்தக் கடன் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!