by Vignesh Perumal on | 2025-05-22 12:10 PM
ராமாயண வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான விபீஷணர் பட்டாபிஷேக விழா, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு, ராமேஸ்வரம் திருத்தலத்தின் தனிச்சிறப்புமிக்க வரலாற்றை பக்தர்களுக்கு நினைவூட்டும் விதமாக அமைகிறது. இந்த ஆண்டு, ஜூன் 4-ஆம் தேதி விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெறுவதால், அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் கோவிலில், ராமலிங்க பிரதிஷ்டை விழா எதிர்வரும் ஜூன் 3-ஆம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 5:00 மணிக்கு மேல் ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான விபீஷணர் பட்டாபிஷேகம், ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை, கோவிலில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணன், அனுமான் ஆகியோருடன் பல்லக்கில் புறப்பாடாகி, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு எழுந்தருள்வார். அங்கு, அன்று மதியம் 12:00 மணிக்கு மேல், ஸ்ரீ ராமர், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டி அருள்புரிவார்.
விபீஷணர் பட்டாபிஷேக விழாவையொட்டி, ஜூன் 4-ஆம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பின்னர், அதிகாலை 3:00 மணி முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து கால பூஜை, சாயரட்சை பூஜை முடிந்ததும், ஸ்ரீ ராமர் புறப்பாடானதும், காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அன்று மாலை 5:00 மணிக்கு பின், கோதண்டராமர் கோவிலில் இருந்து ஸ்ரீ ராமர் கோவிலுக்குத் திரும்பியதும், நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
ஜூன் 5-ஆம் தேதி, கோவிலுக்குள் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறுவதோடு, இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ நிகழ்வுகள் நிறைவு பெறும். இந்த சிறப்புமிக்க நிகழ்வுகளில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு அருள் பெறுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!