by Vignesh Perumal on | 2025-05-21 04:44 PM
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் வசந்த உற்சவ திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (மே 21, 2025) காலை, 45 ஆண்டுகளுக்குப் பிறகு தங்க நாதஸ்வரம் இசைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த அரிய நிகழ்வு பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின், சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனுக்கு 17 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒன்றாகும். உற்சவத்தின்போது, சுவாமி எழுந்தருளும் வசந்த மண்டபம் முழுவதும் வெட்டிவேர்களால் அலங்கரிக்கப்பட்டு, குளிச்சியூட்டக்கூடிய அனைத்து வகையான பொருட்களும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
வசந்த உற்சவத்தின் எட்டாம் திருநாளான இன்று காலை, சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி வசந்த மண்டபத்தை ஏழு முறை வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
முதல் சுற்றின்போது, மல்லாரி இசை இசைக்கப்பட்டது.
இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம் நடைபெற்றது.
மூன்றாவது சுற்றில் வேத பாராயணம் ஒலிக்கப்பட்டது.
நான்காவது சுற்றில் ருத்ர ஜபம் செய்யப்பட்டது.
மிகவும் முக்கியமாக, ஐந்தாவது சுற்றில் தங்க நாதஸ்வரம் இசைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கடந்த 45 ஆண்டுகளாக, பழுது மற்றும் பல்வேறு காரணங்களால் தங்க நாதஸ்வரம் இசைக்கப்படாமல் இருந்தது. நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் மூலம், பாரம்பரிய பூஜைகள் மற்றும் மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பலனாக, 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு வசந்த உற்சவத்தில் தங்க நாதஸ்வரம் மீண்டும் இசைக்கப்பட்டு, பக்தர்களைப் பரவசப்படுத்தியது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!