by Vignesh Perumal on | 2025-05-21 01:12 PM
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை உட்கோட்டப் பகுதியில், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் கண் கூசும் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக தக்கலை போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டாலின் I.P.S. அவர்களின் உத்தரவின் பேரிலும், தக்கலை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் T.P.S. அவர்களின் மேற்பார்வையிலும் இந்த அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
தக்கலை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், புலியூர்குறிச்சி பகுதியில் இன்று (மே 21, 2025) வாகனத் தணிக்கை நடைபெற்றது. அப்போது, வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஆம்னி பேருந்துகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. சோதனையின்போது, விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் கண் கூசும் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் கண் கூசும் முகப்பு விளக்குகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன ஓட்டுநர்கள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக இருப்பதோடு, ஒலி மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது. அதேபோல், கண் கூசும் முகப்பு விளக்குகள், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை மறைத்து, விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. இதுபோன்ற விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடர் சோதனைகள், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து, பாதுகாப்பான பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!