| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

தபால் நிலைய மோசடி..! ரூ.30 லட்சம் சுருட்டிய ஊழியரால் பொதுமக்கள் முற்றுகை..!

by Vignesh Perumal on | 2025-05-21 12:49 PM

Share:


தபால் நிலைய மோசடி..! ரூ.30 லட்சம் சுருட்டிய ஊழியரால் பொதுமக்கள் முற்றுகை..!

திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன்கோட்டை, சிந்தலக்குண்டு கிராமம் அனுப்பப்பட்டி பகுதியில் உள்ள கிளை தபால் நிலையத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரையிலான நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் தபால் நிலைய ஊழியர் பிரதீப் என்பவரைக் கண்டித்து பொதுமக்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுப்பப்பட்டி கிளை தபால் நிலையத்தில் பணியாற்றிய வத்தலகுண்டு தும்மலபட்டியைச் சேர்ந்த பிரதீப் (30) என்பவர் மீது, அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு திட்டங்களில் செலுத்திய பணத்தை மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. பொதுமக்களின் மாதாந்திர சேமிப்புத் திட்டங்கள் (RD), காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance), கலைமகள் திட்டம் போன்ற பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் பொதுமக்கள் செலுத்திய பணத்தை, அவர் முறையாகத் தபால் நிலையத்தில் வரவு வைக்காமல் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி சுமார் ரூ.30 லட்சம் வரை இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோசடி புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, தபால் நிலைய உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டி கிளை தபால் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், பிரதீப் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், தங்கள் கடின உழைப்பில் சேமித்த பணம் மோசடி செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து, அனுப்பப்பட்டி கிளை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால் நிலைய அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்துவிட்டோமோ என்ற அச்சத்திலும், கோபத்திலும் இருந்தனர்.

மோசடி வெளிவந்ததும், பிரதீப் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால் துறை அதிகாரிகள் இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப்பைத் தேடும் பணியில் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணத்தை மீட்கவும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அசைப்பதாக அமைந்துள்ளது.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment