| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்..! கலெக்டர் திட்டவட்டம்...!

by Vignesh Perumal on | 2025-05-21 10:31 AM

Share:


அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்..! கலெக்டர் திட்டவட்டம்...!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் கல்லூரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான மா சாகுபடி கருத்தரங்கம் நேற்று (மே 20, 2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ஏராளமான விவசாயிகள், குறிப்பாக பெண்கள், பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், "தேனி மாவட்டத்தில் ஏராளமானோர் விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். இதுபோன்ற கருத்தரங்குகளை வெவ்வேறு இடங்களில் நடத்துவதன் மூலம், சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய புதிய அணுகுமுறைகள் குறித்த தகவல்களை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்," என்று தெரிவித்தார்.

மேலும், "கிராமப்புறங்களில் பெண்கள் விவசாயத் தொழிலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இக்கருத்தரங்கில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விவசாயம் குறித்து முழுமையாக கற்றுக்கொண்டு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் விவசாயத் தொழில் முன்னேற்றம் காண வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மா ரகங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிய ஆட்சியர், "மாம்பழங்களை மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்வதன் மூலமும் அதிக இலாபம் பெறலாம்," என்று தெரிவித்தார்.

மாறுபட்ட காலநிலையை எதிர்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு பல்வேறு கருத்தரங்குகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"மா சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்," என்று ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் எடுத்துரைத்தார்.

இந்தக் கருத்தரங்கில், அரசின் திட்டங்கள், உயர் தொழில்நுட்பங்கள், மா சாகுபடி பரப்பினை அதிகரிக்கச் செய்தல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, அங்கக வேளாண்மையில் மா சாகுபடி மற்றும் லாபகரமான முறையில் மகசூல் அடைவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விரிவாக எடுத்துரைக்க உள்ளார்கள். குறிப்பாக, விவசாயிகளும் தங்களின் பல்வேறு அனுபவங்கள் மற்றும் தீர்வு முறைகள் குறித்து எடுத்துரைக்கவும், 'LDIT சாகுபடி' குறித்த தங்களது சந்தேகங்களுக்கான தீர்வுகளைத் தெரிந்து கொள்ளவும் இந்தக் கருத்தரங்கினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மா சாகுபடி குறித்த விவசாயிகளுக்கான விளக்கக் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார். முன்னதாக, தோட்டக்கலைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, பல வகையான மாம்பழங்களின் கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.


இக்கருத்தரங்கில் தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி. நிர்மலா, ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி செயலாளர் திரு. புருசோத்தமன், முதல்வர் திரு. சிவக்குமார், மற்றும் ஆராய்ச்சியாளர்கள், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment