by Vignesh Perumal on | 2025-05-20 12:19 PM
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற திரெளபதி அம்மன் தேரோட்டத் திருவிழாவில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. எதிர்பாராத விதமாக தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த நான்கு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரத்தி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் தேரோட்டத் திருவிழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேல்நிலை மின் கம்பியுடன் உரசியுள்ளது. இதனால், மின்சாரம் தேர் மீது பாய்ந்ததில் தேர் இழுத்து வந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்ததில் தேர் இழுத்து வந்த மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் நிலை குறித்து தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
இந்த துயர சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் விபத்துக்கான காரணம், தேரோட்டத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணிப்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை...! திமுக கவுன்சிலர் அதிரடி கைது...!
படத்தைத் தடை செய்க..! இல்லையெனில் கடும் விளைவுகள்..! சீமான் எச்சரிக்கை...!
இரட்டைக்கொலை விவகாரம்...! தவெக தலைவர் விஜய்..! கடும் கண்டனம்..!
கொடைக்கானலில்...! பயணிகளுக்குத் துப்பாக்கி ஏந்திய...! போலீஸ் பாதுகாப்பு..!
கொடூரம்...! குடியிருப்புக்குள் புகுந்து கும்பல் தாக்குதல்..! 2 பேர் உயிரிழப்பு; 6 பேர் படுகாயம்..!