by admin on | 2025-02-04 08:05 PM
குமுளியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய கேரளா அமைப்பினர்.
கேரளத்தில் உள்ள ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குழு சார்பாக இன்று இடுக்கி குமுளியில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை அடியில் தற்போது நீர்த்தேக்கும் அளவான 142 அடியில் இருந்து இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தியும் , அணையில் இருந்து நீர் வழி சுரங்கப்பாதை அமைத்துதண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் உட்டபட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ ஸ்டீபன், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு தலைவர் கே .எம் .சுபைர் ஆகியோர் தலைமையில் 15 பேர் குமுளி பொதுப்பணித்துறை ரெஸ்ட் ஹவுஸில் இருந்து குமுளி பேருந்து நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை குமுளி கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கோஷங்கள் எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டம் நடத்த முயன்றும், குமுளி பேருந்து நிலையத்தை நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை குமுளி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் கேரள போலீஸாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நிருபர் செல்வ பிரபா
உத்தமபாளையம். தேனி மாவட்டம்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!