by Vignesh Perumal on | 2025-05-18 04:03 PM
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நேற்று (17.05.2025) பணப் பிரச்சனை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கட்டட தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் கட்டட தொழிலாளி மற்றும் அருகில் இருந்த 14 வயது சிறுவன் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: 'திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளிக்கும் இடையே பண கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கட்டட தொழிலாளியை நோக்கி சுட்டுள்ளார்.
துப்பாக்கி குண்டு கட்டட தொழிலாளியின் காலில் பாய்ந்தது. மேலும் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவனின் கையிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு முதலுதவி அளித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்'. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணப் பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!