by Vignesh Perumal on | 2025-05-18 01:27 PM
தேனி மாவட்டம் போடி அருகே எரணம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்த 24 வயது இளைஞர் மற்றும் இருவரின் பெற்றோர் உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போடி அருகே உள்ள எரணம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சூர்யா (வயது 24) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்போது அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரின் பேரில், நேற்று (17.05.2025) போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுமியை திருமணம் செய்த சூர்யா, அவரது பெற்றோர் சின்ன ஈஸ்வரன் மற்றும் காளீஸ்வரி, மேலும் சிறுமியின் பெற்றோர் ஈஸ்வரன் மற்றும் மாரியம்மாள் ஆகிய ஐந்து பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடத்தியது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!