by Vignesh Perumal on | 2025-05-18 12:32 PM
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சார்மினார் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
சார்மினார் பகுதியில் உள்ள கிருஷ்ணா பேர்ல்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (18.05.2025) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் குடியிருப்பில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த விபத்தில் முதலில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 9 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், குறுகிய சாலைகள் மற்றும் நெருக்கமான குடியிருப்புகள் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சார்மினார் செல்லும் சாலையை தற்காலிகமாக மூடியுள்ளனர். மேலும், தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!