by Vignesh Perumal on | 2025-05-18 11:40 AM
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த வழக்கில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், பனையப்பட்டியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், யாருக்கும் தெரியாமல் தனக்குத் தானே பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர், அந்த குழந்தையை வீட்டின் வாசலிலேயே குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளார்.
நேற்று (17.05.2025) அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் புதைக்கப்பட்ட இடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழியைத் தோண்டி உயிருடன் இருந்த குழந்தையை மீட்டார். பின்னர், அந்த குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் காதலனான சிலம்பரசன் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவி ஏன் குழந்தையை புதைத்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!