| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தந்தை இறந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவி...! இன்று சாதனை...! குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2025-05-17 02:23 PM

Share:


தந்தை இறந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவி...! இன்று சாதனை...! குவியும் பாராட்டுக்கள்...!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள கோவில்பாறை கிராமத்தைசேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி கிருஷ்ணசெல்வி. இவர்களுக்கு ஜெயகிருத்திகா (வயது 14) என்ற மகள் உள்ளார். மாற் றுத்திறனாளியான செந்தில்குமார் தேனிவேளாண்மைதுறை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணசெல்வி இறந்தார். இதைத்தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் தாத்தா, பாட்டியுடன் ஜெயகிருத்திகா வளர்ந்து வந்தார்.

இந்தநிலையில் ஜெயகிருத்திகா, கடமலைக்குண்டுவில் உள்ள ஹயக்ரீவா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.படித்து வந்தார். பொதுத்தேர்வில் அறிவியல் தேர்வு எழுத செல்லும் போது தந்தை செந்தில் குமார் உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இந்த துக்கத்திலும் ஜெயகிருத்திகா அறிவியல் பொதுத்தேர்வை எழுதிவிட்டு தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார்.

இந்தநிலையில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் ஜெயகிருத்திகா 458 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். மேலும் தந்தை இறந்த நாளில் எழுதிய அறிவியல் தேர்வில் 91 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதையடுத்து சாதனை படைத்த மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் எஸ்.கே.குமரேசன், துணைத் தாளாளர் லூவன்குமரேசன், முதல்வர் உமா  மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் மாணவியை பாராட்டினர். மேலும் ஜெயகிருத்திகாவுக்கு 11 மற்றும் 12-ம் வகுப்பில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கவைக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தாளாளர் குமரேசன் தெரிவித்தார். தனது பெற்றோரின் ஆசைப்படி டாக்டர் ஆவதே தனது லட்சியம் என மாணவி ஜெயகிருத்திகா கூறினார்.



நிருபர்-G.மீனாட்சிசுந்தர் ஆண்டிபட்டி தேனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment