by Vignesh Perumal on | 2025-05-17 12:47 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நகராட்சி அதிகாரிகள் தேசியக் கொடி கம்பங்களை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் பகுதியில் பள்ளி மற்றும் நூலகம் முன்பு தேசியக் கொடி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பங்களை, நகராட்சி அதிகாரிகள் இன்று (17.05.2025) அகற்றியுள்ளனர். அதிகாரிகள், இவை ஏதோ ஒரு கட்சியின் கொடிக்கம்பம் என்று தவறாக நினைத்து அகற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேசியக் கொடி கம்பங்களை அகற்றியது தேசத்தை அவமதிக்கும் செயல் என்று பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளிடம் முறையிட்டனர். தேசியக் கொடி கம்பங்களை அகற்றியது தவறு என்றும், உடனடியாக மீண்டும் அதே இடத்தில் தேசியக் கொடி கம்பங்களை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இந்த தவறுக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்கள் என்றும், அகற்றப்பட்ட தேசியக் கொடி கம்பங்கள் மீண்டும் எப்போது நிறுவப்படும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!