by Vignesh Perumal on | 2025-05-17 11:58 AM
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையுடன் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த செல்விக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றம் இன்று (17.05.2025) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை சிவக்குமார் (வயது 39) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த குற்றத்திற்கு செல்வி (வயது 49) என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவக்குமார் மற்றும் செல்வி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடுதலாக 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹1,12,000 அபராதமும் விதித்தார்.
மேலும், இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த செல்விக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டியுள்ளதாக கருதப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!