| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

சென்னை பயணிகள் கவனத்திற்கு...! 13 ரயில்கள் ரத்து...!

by Vignesh Perumal on | 2025-05-17 11:38 AM

Share:


சென்னை பயணிகள் கவனத்திற்கு...! 13 ரயில்கள் ரத்து...!

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே இன்று (17.05.2025) இரவு 10 மணி முதல் நாளை (18.05.2025) காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் 4 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், நாளை (18.05.2025) இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் 13 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தற்காலிக ரயில் ரத்து பயணிகளுக்கு சிறிது சிரமத்தை ஏற்படுத்தலாம் என்பதால், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், வழக்கம் போல் ரயில் சேவைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment