by Vignesh Perumal on | 2025-05-17 11:07 AM
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து மயில் ரவுண்டானா செல்லும் வழியில் வேகத்தடைக்கு முன்பு ஒருவர் சாலையில் படுத்துக் கொண்டிருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (16.05.2025) பழனி பேருந்து நிலையத்திலிருந்து மயில் ரவுண்டானா செல்லும் வழியில், வேகத்தடைக்கு முன்பு ஒருவர் சாலையில் படுத்துக் கிடந்ததை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. பகல் நேரத்திலேயே இதுபோன்ற நிலைமை நீடித்தால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் படுத்துக் கிடக்கும் நபரை அப்புறப்படுத்தவும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!