by Vignesh Perumal on | 2025-05-17 10:58 AM
திண்டுக்கல் அருகே தர்மபுரியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் யோகா பாபு (வயது 17) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று (17.05.2025) காலை யோகா பாபுவின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யோகா பாபு திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் இந்த திடீர் முடிவு அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!