by Vignesh Perumal on | 2025-05-17 10:46 AM
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டை இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், வல்லத்திரா கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சிறப்பான வெற்றியைப் பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குமார் மாணவிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி பேசினார். மேலும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒவ்வொரு மாணவிகளுக்கும் பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த சிறப்பான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். பள்ளியின் இந்த சாதனை அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-பழனியப்பன் புதுக்கோட்டை.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!