by Vignesh Perumal on | 2025-05-16 05:48 PM
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரையடுத்து, திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (16.05.2025) ரத்து செய்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்து வந்தது. சமீபத்தில் அந்த நிறுவனம் வழங்கிய நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்து இன்று தீர்ப்பளித்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு பெரும் அளித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து நிறுவனம் மீண்டும் நெய் உற்பத்தியை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!