by Vignesh Perumal on | 2025-05-16 05:37 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் தினமும் இருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், மின் மோட்டார் பயன்பாடு மற்றும் தண்ணீர் வீணாவதால் பலருக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் நாள்தோறும் இரண்டு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், சில வீடுகள் மற்றும் கடைகளில் பெரிய அளவிலான தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு, குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி நீரை உறிஞ்சுவதால், பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் குறைந்த அழுத்தத்தில் கிடைக்கிறது. மேலும், சிலருக்கு சுத்தமாக குடிநீரே கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் குடிநீருக்காக வரி வசூல் செய்து வரும் நிலையில், குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் பொருத்துவதற்கு அனுமதி அளிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், சில இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக தண்ணீர் தொட்டிகள் மற்றும் கேட் வால்வுகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைவருக்கும் சீரான முறையில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய சுழற்சி முறையில் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணுமாறு பெரியகுளம் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இணை ஆசிரியர்: N.சதீஷ்குமார் பெரியகுளம், தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!