by Vignesh Perumal on | 2025-05-16 05:11 PM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று (16.05.2025) மாவட்ட மைய நூலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை முறையாக இருக்கிறதா என்று பார்வையிட்டார். மேலும், நூலகத்தில் உள்ள புத்தகங்களின் இருப்பு மற்றும் வாசகர்களுக்கு தேவையான புதிய புத்தகங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் வாசிப்பு பழக்கம் மற்றும் நூலகத்தின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட நூலகங்களின் ஆய்வாளர் வள்ளி மற்றும் மாநகராட்சி நகர் நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்த நேரடி ஆய்வு, நூலகத்தின் மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!