by Vignesh Perumal on | 2025-05-16 01:48 PM
தாம்பரம் ஈஸ்ட் போக்குவரத்து காவல்துறையினர் நேற்று வேளச்சேரி மெயின் ரோட்டில் மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஏற்படுத்தப்பட்டிருந்த ஆபத்தான இரும்பு தடுப்புகள், வெளியான எவிடன்ஸ் செய்தியின் எதிரொலியாக இன்று அகற்றப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று (மே 15, 2025) உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர், வேளச்சேரி மெயின் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையின் இருபுறமும் நெருக்கமாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் குறுகிய இடைவெளியில் வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். நிலை தடுமாறி விழும் அபாயகரமான சூழ்நிலையும் உருவானது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்த நிலையில், எவிடன்ஸில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், அந்த செய்தியின் எதிரொலியாக இன்று (மே 16, 2025) தாம்பரம் ஈஸ்ட் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வேளச்சேரி மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த அந்த ஆபத்தான இரும்பு தடுப்புகளை அகற்றியுள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதுகாப்பான முறையில் தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவல்துறையினருக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி- ஜெயவேல் தாம்பரம்-சென்னை.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!