by Vignesh Perumal on | 2025-05-16 01:01 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரே தேர்வு மையத்தில் 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "பிளஸ் 2 வேதியியல் தேர்வில் ஒரே மையத்தில் 167 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் பணியில் ஈடுபட்ட தேர்வுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். மேலும், இந்த விவகாரத்தில் முறைகேடுகள் ஏதும் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், தேர்வு முடிவுகள் வெளிப்படையான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். இந்த சம்பவம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!