by Vignesh Perumal on | 2025-05-16 12:44 PM
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (16.05.2025) நடத்திய மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தயாநிதி மாறன் சாலையில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். அதேசமயம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் முக்கியத் தலைவர்களே பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கூட்டத்தில் கலந்துகொள்ளாத மாவட்ட செயலாளர்கள் பலரும், தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அன்புமணி ராமதாஸ் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பது குறித்தும் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிகழ்வு பாமக கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
" ஸ்லீப்பர் செல் " தான் ஆதவ் அர்ஜுனா - விஜயை எச்சரிக்கும் மச்சான் ஜோஸ் சார்லஸ் !
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரியகுளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!