by Vignesh Perumal on | 2025-05-16 10:22 AM
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (16.05.2025) வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, இந்த ஆண்டு நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையான 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.25 ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.82 ஆகவும் உள்ளது. இதன்மூலம், மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும், பள்ளிகளிலும் அந்தந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளராமல், அடுத்த முறை இன்னும் சிறப்பாக முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் கூறினார். மேலும், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!