by Vignesh Perumal on | 2025-05-16 10:14 AM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வழக்கறிஞர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று (16.05.2025) நிலக்கோட்டைக்கு அடுத்த சிலுக்குவார்பட்டி அருகே ஒரு பார்ச்சூனர் கார் மீது எதிரே வந்த கண்டைனர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த கோர விபத்தில் பார்ச்சூனர் காரில் பயணம் செய்த சிவகாசி, ஆனையூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜபிரபு (வயது 40) மற்றும் பேரையூரைச் சேர்ந்த கார்த்திக் (வயது 30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் சிக்கியிருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர்.
நிலக்கோட்டை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ராஜபுஷ்பம் மற்றும் சார்பு ஆய்வாளர் அபினேஷ் தலைமையிலான காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!