by Vignesh Perumal on | 2025-05-16 10:04 AM
தமிழ்நாட்டில் இன்று (மே 16, 2025) வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், பல்வேறு பாடங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
தமிழ் பாடத்தில் 8 மாணவர்கள் முழு மதிப்பெண் அதாவது 100-க்கு 100 பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பிற பாடங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஆங்கில பாடத்தில் 346 மாணவர்கள் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். கணிதத்தில் அதிகபட்சமாக 1996 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 10,256 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏராளமான மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர். குறிப்பாக அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.