by Vignesh Perumal on | 2025-05-16 09:53 AM
தமிழ்நாட்டில் இன்று (மே 16, 2025) வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.88% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.74% ஆகவும் உள்ளது. இதன்மூலம், மாணவர்களை விட மாணவிகள் 4.14% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார்.
தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இணையதளங்கள் மற்றும் டிஜிலாக்கர் செயலி மூலம் அறிந்துகொள்ளலாம்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.