by Satheesh on | 2025-05-15 10:11 PM
தேனி- பெரியகுளம் : திண்டுக்கல்- குமுளி பைபாஸ் சாலையில் டி.கள்ளிப்பட்டி- ஜல்லிப்பட்டி சந்திப்பில் சாலையைக் கடந்த தொழு மாடுகள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 18 மாடுகள் 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன. தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். தகவலறிந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போக்குவரத்தை சரி செய்தனர். அரசு பஸ் டிரைவர் அழகர்சாமி மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், அரசு மற்றும் போக்குவரத்து கழக இயக்குனரின் உத்தரவை மீறி கம்பத்தில் இருந்து திண்டுக்கல் சென்ற TN 57N 2160 அரசுப்பஸ் நகருக்குள் செல்லாமல் பைபாஸில் அதிவேகமாகவும், அதன் டிரைவர் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் தடம் மாறி இயக்கிய அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயம் அடைந்த மாடுகள் துடித்தது காண்போரை கண் கலங்க வைத்தது.
செய்தியாளர் : N .சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!