by Vignesh Perumal on | 2025-05-15 08:54 PM
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் இன்று (மே 15, 2025) பேன்சி ஸ்டோரில் லேப்டாப் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெயவீரன் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் படுகாயமடைந்தார்.
சம்பவத்தன்று, ஜெயவீரன் தனது பேன்சி ஸ்டோரில் சார்ஜ் போட்டபடி லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென லேப்டாப் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் ஜெயவீரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வெடி சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து ஜெயவீரனை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக லேப்டாப் அதிக வெப்பமடைந்து வெடித்ததாக தெரிய வந்துள்ளது. வெடி விபத்தின் காரணமாக கடையில் இருந்த சில பொருட்களும் சேதமடைந்தன. கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வெடி விபத்துக்கான சரியான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சார்ஜ் போடும்போது எலக்ட்ரானிக் பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என்றும், தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!