| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கோவையில் பரபரப்பு..! துப்பாக்கி முனையில் கைது...!

by Vignesh Perumal on | 2025-05-15 11:53 AM

Share:


கோவையில் பரபரப்பு..! துப்பாக்கி முனையில் கைது...!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிஸ்ரீ (23) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனர். ஹரிஸ்ரீ, பீகாரில் இருந்து நாட்டுத்துப்பாக்கிகள் வாங்கி கள்ளச்சந்தையில் விற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் அவரை நெருங்கியபோது, தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட முயன்றார். அதிர்ச்சியடைந்த போலீசார் தற்காப்புக்காக ஹரிஸ்ரீயின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த ஹரிஸ்ரீ சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் அதிகாரிகள் காயமடைந்த ஹரிஸ்ரீயை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், ஹரிஸ்ரீ சில நாட்களுக்கு முன்பு பாரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை மிரட்டுவதற்காக நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வானில் சுட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரிஸ்ரீக்கு நாட்டுத்துப்பாக்கிகள் எங்கிருந்து கிடைத்தன, வேறு யாருக்கெல்லாம் அவர் விற்பனை செய்தார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment