by Vignesh Perumal on | 2025-05-15 11:36 AM
2021 ஆம் ஆண்டு வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 2023 ஆம் ஆண்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட டிக்காராம் என்பவர் தற்போது சென்னையில் நகைத்திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிக்காராம், கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சென்னையில் கட்டட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், குரோம்பேட்டையில் கடந்த 6 ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருடப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் ஜாய் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்றிருந்த டிக்காராம், ஜாமீனில் வெளியே வந்தும் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை நகை திருட்டு தொடர்பாக போலீசார் டிக்காராமிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் இதற்கு முன்பு வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிக்காராம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!