by Vignesh Perumal on | 2025-05-15 10:13 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியில் நேற்றிரவு (14.05.2025) திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தொழு மாடுகள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 20க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்தன.
தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். நேற்று இரவு மாடுகள் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவற்றின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 மாடுகள் உயிரிழந்தன. மேலும், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்ட மாடுகள் வலியால் துடித்துக் கொண்டிருந்தன.
விபத்து குறித்து தகவல் அறிந்த டி.கள்ளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் அழகர்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மாடுகளின் உரிமையாளர் சுருளிச்சாமி மற்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். காயமடைந்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!