by Vignesh Perumal on | 2025-05-14 03:17 PM
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜாபர்சாதிக் (வயது 50) என்பவர் 2005 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வடக்கு காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஜாபர்சாதிக், நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து திண்டுக்கல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில், நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ், காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் மற்றும் நீதிமன்ற காவலர் தேன்மொழி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, ஜாபர்சாதிக் திருப்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்தனர். உடனடியாக அங்கு சென்ற தனிப்படையினர் ஜாபர்சாதிக்கை கைது செய்தனர்.
பின்னர் அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிடியாணை நிறைவேற்றப்பட்டது.
நிருபர்கள்-பாலாஜி, கதிரேசன் பழனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!