by Vignesh Perumal on | 2025-05-14 02:55 PM
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா, இறகுப்பந்து விளையாட்டு மைதானம், முதியோர் நடை பயிற்சி மேடை மற்றும் கழிப்பறை ஆகியவை கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே கிடந்தன.
இந்த நிலையில், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதி திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து இதுகுறித்து மனு அளித்தார். அதன் எதிரொலியாக, பூட்டியிருந்த உடற்பயிற்சி கூடம், இரவு இறகுப்பந்து மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றை உடனடியாகத் திறக்க திருமதி கனிமொழி கருணாநிதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பூட்டியிருந்த பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டு, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்து திரு. கார்த்திகேயன் கூறுகையில், "பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உடனடியாக பூங்காவையும் விளையாட்டு மைதானத்தையும் திறக்க உத்தரவிட்ட திமுக பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி அக்கா கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். மேலும், நான்கு ஆண்டுகளாக பூட்டியிருந்த பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டதால், பழனிசெட்டிபட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!