by Vignesh Perumal on | 2025-05-14 02:28 PM
மதுரை கள்ளழகர் திருவிழாவை முன்னிட்டு, ராகவி சினி ஆர்ட்ஸ் மற்றும் லியானா குரூப்ஸ் இணைந்து அன்னதானம் வழங்கினர். எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, திண்டுக்கல் தேவி ஆகியோரின் நல்லாசியுடன், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் இந்த அன்னதானம் நடைபெற்றது.
மதுரையின் முக்கிய பகுதிகளான கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்க்கெட் மற்றும் தமுக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்வில், லட்டு, புளியோதரை மற்றும் சுண்டல் என மொத்தம் 501 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பிரபல நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும் நடிகருமான அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும் நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் ரிஷிதா மற்றும் லியானா குழுவைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்னதானத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டது. சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும் அவரது குழுவினரின் இந்த மனிதாபிமான முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தன. கள்ளழகர் திருவிழாவின் முக்கியத்துவத்தையும், அன்னதானத்தின் சிறப்பையும் இந்த நிகழ்வு எடுத்துரைத்தது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!