by Vignesh Perumal on | 2025-05-14 02:15 PM
நாகப்பட்டினம் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (13.05.2025) பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்குதல் மற்றும் பழைய அட்டைகளை புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நாளில் அனைத்து மருத்துவர்களாலும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கான ஊனத்தின் சதவீதம் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் மற்றும் செவித்திறன் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர் திரு. செந்தில் முருகன் ஆகியோர் உடனிருந்து உடனடியாக அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டைக்கான பணிகளை மேற்கொண்டனர். பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, அன்றே அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் தெத்தி சமூக சேவகர் H. ஜாகிர் உசேன் அவர்கள், நாகூர் மூர்த்தி என்ற மாற்றுத்திறனாளியை அழைத்துச் சென்றிருந்தார். எலும்பு மருத்துவர் அகமது நசீர் அவர்கள் பரிசோதனை செய்து மூர்த்திக்கு 50 சதவீதம் ஊனம் இருப்பதாக உறுதி செய்தார். பின்னர் மாலையே நாகை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அலுவலர் திரு. கார்த்திகேயன் மற்றும் திரு. செந்தில் முருகன் ஆகியோர் புதிய தேசிய அடையாள அட்டையை மூர்த்திக்கு வழங்கினர்.
பயனாளி மூர்த்தி மற்றும் அவரது மனைவி, சமூக சேவகர் H. ஜாகிர் உசேன் ஆகியோர் மருத்துவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் திரு. கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் மிகவும் துரிதமாக செயல்பட்டு வருவதை சமூக சேவகர் H. ஜாகிர் உசேன் பாராட்டினார்.
மேலும், நாகை மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி வருவதாகவும், மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் அனைவரும் அரசு உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் H. ஜாகிர் உசேன் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!