| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

போதைப் பொருள் விற்பனையால் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை...???

by Muthukamatchi on | 2025-05-14 01:59 PM

Share:


போதைப் பொருள் விற்பனையால் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை...???

அதிகரித்து வரும் போதை பொருள் புழக்கத்தால் உயரும் பலி..?? எண்ணிக்கை..??? இதில் கூடுதல் கவனம் செலுத்துமா..?? தமிழக அரசு..??. அறியாத வயதில் காதல் வருவது இயற்கையானது தான். அதனை நல்வழிபடுத்தி மீட்டிடலாம் .ஆனால் போதைக்கு அடிமையானால் பாதை இருட்டி விடும் பதின் வயது தொடங்கி கிழம் வரை போதைக்கு அடிமையாகி தற்போது பரவிவரும் பெரும் நோயாக மாறிவருகிறது.

புளிப்பு மிட்டாய் போல மிகச் சுலபமாக கிடைக்கும் கூலிப் தொடங்கி கஞ்சா வரை பாளாக்கிக்கொண்டிருக்கிறது. கல்விச்சூழலை...??? ஆசிரியர்கள் இதில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். தமிழக அரசு பள்ளி மாணவர்களிடத்தில் போதைக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் இருப்பது கவலை தரக்கூடிய ஒன்று. தன்னார்வளர்களை கொண்டு இந்த விழிப்புணர்வு தீவிரப்படுத்த முயற்ச்சித்தால் மட்டுமே நல்வழிப்படுத்த இயலும் என்பது எமது பார்வை.

குடி குடியை கெடுக்கும் . மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...இந்த வரிசையில் வெக்காதே வாயில கூலிப்பு  வெச்ச புற்றுநோய் பாதிப்பு. போடாதடா கஞ்சா வாழ்க்கை பறந்துடும் பஞ்சா...என ஒரு ஒரு பள்ளி கல்லூரி சுவர்களிலும் எழுதும் நிலை வரும் போல தோன்றுகிறது புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? யாரிடம் புகார் கொடுப்பது? இதற்கென தனி தொலைபேசி எண் உண்டா? பாதிக்கப்பட்டவர்களை எப்படி திருத்துவது? என பல கேள்விகளை கேட்டுக் கொண்டே சாமானியர்கள் கடந்துவிடுகின்றனர்.

ஆம், அரசு இதற்கு வருடம் வருடம் நிதி ஒதுக்கீடு செய்து விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது ஆனால் தமிழகத்தில் இதற்கு சரியான நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை .காவலர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், குழந்தை நல அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேசிய இளையோர் தன்னார்வலர்கள் என  பல வகைகளில் அரசு சார்ந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் பத்திரிகை துறையினர் இவர்கள் அனைவரிடமும் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாராக தகவல் பெற்ற அரசு சார்ந்த பிரதிநிகள் குழு பாதிக்கப்பட்ட மாணவ/மாணவியருக்கு எவ்வாறன உதவி செய்ய முடியும் என்பது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் .நமக்கு தெரிந்த நபர்களாக இருப்பின் அல்லது தானாக முன்வந்து கூறுபவர்களுக்கு 104 என்ற அரசு சேவை எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை, போதையின் பிடியில் இருந்து மீண்டு வர உதவியான வழிமுறைகளை பெறலாம்.

இந்த நடைமுறைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் தனிக்கவனம் செலுத்தினால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர இயலும் .அதிக அளவில் தற்போதைய ஆளும் கட்சியை சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு வேண்டப்பட்டோர் என பலர் போதை பொருள் விற்பனை செய்வது அடிக்கடி செய்தகளில் வரும் பொதுவான தகவலாக மாறிவிட்டது. பெற்றோர்கள் இதனை செய்வதறியாது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் காசையும் வாங்கி  புட்டு, ஓட்டையும் போட்டுப் புட்டு இப்படி புலம்பி என்ன செய்ய என அவர்கள் மனம் வருந்தி பேசிக்கொள்கின்றனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் நாட்டையே உழுக்கியது. 18 ஜீன் 2024 அன்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை குடித்ததால் 67 பேர் இறந்தனர்,100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் அதிக உயிர்களை பலி வாங்கியது இந்த கள்ளக்குறிச்சி சம்பவமாகசாராயத்தில்  அதிக அளவில் டாக்சின்கள் இருப்பது பலருக்கு தெரிவதே இல்லை .

போதை பொருள் பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு செய்யும் தன்னார்வலரின் தந்தை இதே போதை பொருள் உபயோத்தினால் கல்லீரல் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்படைந்து உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. இது பற்றி அவரிடம் விசாரித்ததில் கல்லீரலில் இருந்த டாக்ஸின் அளவு மூளை பாதிப்பை ஏற்படுத்தி இரத்தத்திலும் அதிக அளவு கலந்திருக்கிறது.

இதனால் சரியான விழிப்புணர்வற்ற அவருக்கு உடல்நிலை மோசமாகி நுரையீரல் தொற்று அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிரார் என மருத்துவ அறிக்கையின் வாயிலாக தகவல் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இதுபோல பல சம்பவங்கள் போதையினால் நடந்தேறியும் தற்போதுவரை நடந்துகொண்டும் இருக்கிறது. இதற்கு பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களே சாட்சி. "

உங்கள் எவிடன்ஸ்" ...  சிறப்பு பார்வை கட்டுரையாளர் கதிரேசன்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment